Saturday, July 26, 2025
23.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமூளைச்சாவடைந்த மாணவனின் உடலுறுப்புகள் தானம்

மூளைச்சாவடைந்த மாணவனின் உடலுறுப்புகள் தானம்

மூளைச்சாவு அடைந்த மாணவர் ஒருவரின் உடல் உறுப்புகள் அவரது குடும்ப உறுப்பினர்களின் அனுமதியுடன் பல நோயாளிகளின் உயிரைக் காப்பாற்ற தானம் செய்யப்பட்டுள்ளன.

குருநாகல் மலியதேவ கல்லூரியின் உயர்தர மாணவரான பிரவீன் பண்டார, தனது தாய் மற்றும் சகோதரர்களுடன் பயணித்தபோது விபத்தில் சிக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

பிரவீனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்ததால், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவருக்கு மூளைச்சாவு அடைந்துள்ளதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த விபத்தில் பிரவீனின் தாயார் உயிரிழந்ததுடன், அவரது சகோதரர் காயமடைந்திருந்தார்.

குறித்த சிறுவனின் இதயம், நுரையீரல, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை தானம்செய்ய இளைஞனின் தந்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த வாரம், மூளைச்சாவு அடைந்த ஒரு யுவதியின் குடும்பத்தினர் ஏழு நோயாளிகளைக் காப்பாற்றுவதற்காக அவரது உறுப்புகளை தானம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles