Saturday, February 14, 2026
26.7 C
Colombo
செய்திகள்உலகம்புதுமண தம்பதிக்கு கிடைத்த விபரீத பரிசு

புதுமண தம்பதிக்கு கிடைத்த விபரீத பரிசு

திருமணப் பரிசாகப் கிடைத்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் வெடித்துச் சிதறியதில் மணமகனும், அவரது சகோதரனும் உயிரிழந்த சம்பவம் மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

புதுமணத் தம்பதிகளுக்கு திருமண பரிசாக கிடைத்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்திற்கு மின் இணைப்பை கொடுக்கச் சென்றபோது ஏற்பட்ட வெடிவிபத்து காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றது.

பரிசாக பெறப்பட்ட ஹோம் தியேட்டர் அமைப்பில் சில வெடிபொருட்கள் இருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

குறித்த பரிசை மணப்பெண்ணின் முன்னாள் காதலன் வழங்கியதாக கூறப்படுவதுடன், சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காதலி வேறு இளைஞனை மணந்ததால் ஏற்பட்ட கோபமே இச்சம்பவத்திற்கு காரணம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்தில் 18 மாத குழந்தை மற்றும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

திருமணமான பெண்ணை தன்னுடன் தொடர்பு வைத்துக் கொள்ளுமாறு சந்தேக நபர் அழுத்தம் கொடுத்துள்ளதாக பொலிஸார் கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles