Wednesday, July 23, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசட்டவிரோதமாக கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைது

சட்டவிரோதமாக கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைது

யாழ்ப்பாணம் – நாகர்கோவில் மற்றும் குடாரப்பு பகுதியில் சட்டவிரோத கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கைதாகினர்.

கைதானவர்களிடமிருந்து 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடற்படையினர் நேற்று மேற்கொண்ட தேடுதலின் போது, குறித்த மீனவர்கள் கைதாகினர்.

இதன்படி, நாகர்கோவில் கடற்பகுதியில் சட்டவிரோத கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைதானவர்களிடம் இருந்து ஆயிரத்து 305 கடலட்டைகளும், 4 படகுகளும் கைப்பற்றப்பட்டன.

இதுதவிர, குடாரப்பு கடற்பகுதியில் அனுமதிபத்திரம் இன்றி கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 5 மீனவர்கள் கைதாகினர்.

கைதானவர்களிடம் இருந்து ஆயிரத்து 700 கடலட்டைகளும், இரண்டு படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles