புத்தாண்டு பண்டிகை காலத்திற்காக தற்போதுள்ள எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இன்று (04) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டதைப் போல தேவையான எரிபொருள் இருப்புகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.