மினுவாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பத்தட்டுவன பகுதியில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இக்கொலை நேற்று (02) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டின் உரிமையாளருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர், கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் இக்கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மினுவாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.