மசகு எண்ணெய் ஏற்றுமதி செய்யும் அரேபிய நாடுகள் ஒப்பெக் என்ற கூட்டமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயித்து வருகின்றன.
இந்த கூட்டமைப்பு மசகு எண்ணெய் உற்பத்தி செய்யும் அளவையும் நிர்ணயிக்கின்றன.
இந்நிலையில், மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்க உள்ளதாக ஒபெக் நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அதன்படி, மசகு எண்ணெய் உற்பத்தியில் முதல் இடத்தில் உள்ள சவுதி அரேபியா அன்றாட மசகு எண்ணெய் உற்பத்தியை 5 இலட்சம் பீப்பாய்களாக குறைக்கவுள்ளது.
எதிர்வரும் மே மாதம் முதல் இந்த ஆண்டு இறுதி வரை அன்றாடம் 5 இலட்சம் மசகு எண்ணெய் பீப்பாய்களை மட்டுமே உற்பத்தி செய்ய உள்ளதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
அதேபோல், ஒபெக் கூட்டமைப்பில் உள்ள பிற நாடுகளும் மசகு எண்ணெய் உற்பத்தியை குறைக்க சம்மதம் தெரிவித்துள்ளன.