Wednesday, January 21, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதனியார் வைத்தியசாலைக்கு 15 இலட்சம் ரூபா அபராதம்

தனியார் வைத்தியசாலைக்கு 15 இலட்சம் ரூபா அபராதம்

டெங்கு மற்றும் இரத்த பரிசோதனைகளுக்காக நோயாளர்களிடம் இருந்து 1450 ரூபாவை மேலதிக தொகையாக அறவிட்ட தெஹிவளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு 15 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையின் வரலாற்றில் தனியார் மருத்துவமனை அல்லது ஆய்வகத்திற்கு விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் இதுவென கொழும்பு மாவட்ட நுகர்வோர் அதிகார சபையின் சிரேஷ்ட புலனாய்வு அதிகாரி ஈ. யு.ரஞ்சன தெரிவித்தார்.

டெங்கு பரிசோதனைக்கு அரசு நிர்ணயித்துள்ள 1200 ரூபாவுக்கு மேல் 2500 ரூபாவும், ரத்த பரிசோதனைக்காக 400 ரூபாவுக்கு மேல் 550 ரூபாவும் அறவிடப்பட்டுள்ளது.

இரண்டு குற்றச்சாட்டுகளும் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அபராதத் தொகை நிர்ணயிக்கப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles