பதுளையில் உள்ள பாடசாலை ஒன்றில் வருடாந்த கிரிக்கெட் போட்டியின் போது, கெப் ரக வாகனம் விபத்துகுள்ளானதில், 2 மாணவர்கள் உயிரிழந்தமை தொடர்பில், விசாரணைகளை ஆரம்பிக்க குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
ஊவா மாகாண கல்விச் செயலாளரின் ஆலோசனைக்கமைய, குறித்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில், மாகாணக் கல்விப் பணிமனையின் அதிகாரி ஒருவரும், மாகாணக் கல்வி திணைக்களத்தின் இரண்டு அதிகாரிகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.