Wednesday, August 6, 2025
27.8 C
Colombo
செய்திகள்உலகம்கேரளாவில் ரயில் பயணிகள் மீது தீ வைப்பு - மூவர் பலி

கேரளாவில் ரயில் பயணிகள் மீது தீ வைப்பு – மூவர் பலி

இந்தியாவின் கேரள மாநிலம் எழத்தூர் பகுதியில் விரைவு ரயிலில் வைத்து பயணிகள் மீது இனந்தெரியாத ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

இதனை கண்டு அச்சமடைந்த நிலையில் ஓடும் ரயிலில் இருந்து குதித்த ஒரு குழந்தை, ஒரு பெண் உட்பட்ட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் மூவரின் சடலங்களும் தண்டவாளத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இந்தநிலையில் தீயினால் 9 பேர் காயமடைந்துள்ளனர்.

அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் ஒடும் ரயிலில் தீ வைத்தவர் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles