Saturday, January 24, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎரிபொருள் விலை குறைப்பின் நன்மைகளை மக்களுக்கு வழங்குக

எரிபொருள் விலை குறைப்பின் நன்மைகளை மக்களுக்கு வழங்குக

எரிபொருள் விலை குறைப்பின் நன்மைகளை நுகர்வோருக்கு வழங்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பொருட்கள் மற்றும் சேவை வழங்குபவர்களிடம் நிதியமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

எரிபொருள் விலை குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்க பல நிறுவனங்கள் முன்வரவில்லை என தெரிவித்து நிதி அமைச்சுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், எரிபொருள் விலையை குறைப்பதில் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை, எரிபொருளின் விலை குறைப்புடன் ஒப்பிடும் போது, ​​அரிசியின் விலையையும் ஓரளவு குறைக்க முடியும் என நுகர்வோர் சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles