இன்று (03) முதல் உள்நாட்டு பால்மாவின் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு பால் மா உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நுகர்வோர் அதிகாரசபையின் அறிவித்தலின் பிரகாரம், மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் விலை குறைக்கப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, உள்நாட்டு பால்மாவின் புதிய விலைகள் பின்னர் அறிவிக்கப்படும் என உள்ளூர் பால் மா உற்பத்தியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.