அத்தியாவசிய ஏற்றுமதி நடவடிக்கைகளுக்கு தேவையான பணத்தை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாட்டின் நிதி ஒழுங்குமுறை தீர்மானங்களின் அடிப்படையில் அபிவிருத்திப் பணிகளுக்கு பணம் விடுவிக்கப்படவில்லையென்றாலும், அமைச்சரவையுடன் கலந்தாலோசித்து வருமானம் ஈட்டும் பணிகளுக்குத் தேவையான பணத்தை விடுவிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.
கட்டான பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட போதே வர்த்தக அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.