சர்வதேச நாணய நிதியம் (IMF) யுக்ரைனுக்கு 15.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி தொகைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
யுத்த மோதல்களினால் அழிந்த நாட்டின் பொருளாதாரத்தை மீட்பதற்காகவே இந்த உதவி தொகை வழங்கப்படுகிறது.
சர்வதேச நாணய நிதியம் யுக்ரைன் வறுமையை நோக்கி செல்வதாக அறிவித்தது. கடந்த ஆண்டு பொருளாதார செயல்பாடு சுமார் 30% குறைந்துள்ளது.
இது தொடர்பான உதவித் தொகையில் இருந்து 2.7 பில்லியன் டொலர்கள் உடனடியாக வழங்கப்பட உள்ளது. மீதமுள்ள பணம் 4 ஆண்டுகளுக்குள் வழங்கப்படும்.