Friday, September 12, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமரக்கறி விலை குறைப்பு

மரக்கறி விலை குறைப்பு

பல பொருளாதார நிலையங்களில் தற்போது மரக்கறிகளின் விலை மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்படுவதாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இதன்படி நேற்று (30) பேலியகொட மெனிங் சந்தையில் ஒரு கிலோ கரட் 90-100 ரூபாவிற்கும் ஒரு கிலோ பூசணிக்காய் 35-50 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டது.

மேலும், தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்தில் ஒரு கிலோகிராம் கேரட் 80 ரூபாவாக குறைந்துள்ளதுடன், மலையகத்து அல்லாத கிழங்கு 60-80 ரூபாவிற்கும் இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்பட்ட பெரிய உருளைக்கிழங்கின் விலையும் 100 சதத்தால் குறைந்துள்ளது.

அதேவேளை இறக்குமதி செய்யப்பட்ட உருளைக்கிழங்கு இன்று பொருளாதார நிலையங்களில் மொத்த விலையில் 140 ரூபாவிற்கும் குறைவாக விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles