விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகர தனது இராஜினாமா கடிதத்தை அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
தேசிய விளையாட்டு சபையின் தலைவர் அர்ஜுன ரணதுங்கவின் தூரநோக்கற்ற மற்றும் கபடத்தனமான நடத்தையினால் தாம் பெரும் அதிர்ச்சிக்கும் அழுத்தத்திற்கும் உள்ளாகியுள்ளமையே இதற்கான காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

