சுமார் ஒரு வருடத்தின் பின்னர் உலகின் அதிக பணவீக்கம் கொண்ட நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.
ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹென்க் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடும் பணவீக்கப் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது.
சில காலத்திற்கு முன்னர் அவர் வெளியிட்ட பணவீக்கச் சுட்டெண்ணில், ஆசியாவிலேயே அதிக பணவீக்கத்தைக் கொண்ட நாடாக இலங்கை இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது.
இதன்படி கடந்த மார்ச் மாதம் 23ஆம் திகதி வெளியிடப்பட்ட பணவீக்க சுட்டெண் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளதை குறிப்பிடத்தக்கது.
