Saturday, September 13, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநிலுவை கட்டணம் செலுத்தாத 40,000 பேரின் நீர் விநியோகம் துண்டிப்பு

நிலுவை கட்டணம் செலுத்தாத 40,000 பேரின் நீர் விநியோகம் துண்டிப்பு

பல மாதங்களாக நீர் கட்டணம் செலுத்தாத 40,000 வாடிக்கையாளர்களின் நீர் இணைப்புகளை துண்டிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

கட்டணம் செலுத்தாதவர்களில் அமைச்சர்கள், அரசு நிறுவனங்கள், வணிக இடங்கள் மற்றும் வீட்டு நுகர்வோர்கள் உள்ளடங்குகின்றனர்.

அவர்களிடமிருந்து அரசாங்கத்திற்கு அறவிடப்படும் தொகை 1600 மில்லியன் ரூபாவாகும்.

மேலும் பில்களை செலுத்தாத 15000 நுகர்வோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யவும் நீர் வழங்கல் சபை எதிர்பார்த்துள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் நீர்க்கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் மூலம் 40 வீதமாக கட்டணம் செலுத்துவது குறைந்துள்ளதுடன் இதன் காரணமாக நீர் வழங்கல் சபை கடும் நிதிச் சிக்கலை எதிர்நோக்க வேண்டியுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles