அரசாங்கம் நாட்டிற்கான இலவச கல்வி மற்றும் சுகாதார சேவைக்காக பெரும் தொகையை செலவிட்டுள்ளது.
ஆனால் கல்வித்துறையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக்காக பாரியளவில் செலவு செய்யவில்லை என பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ‘உணவு ஆராய்ச்சி விளக்கக்கூட்டம் மற்றும் வலையமைப்பு மன்றத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
கைத்தொழில் துறையின் அபிவிருத்திக்காக அரசாங்கம் பணத்தைச் செலவிடவில்லை என அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் பாதுகாப்புக்காக சுமார் 350 பில்லியன் ரூபாவையும், கல்விக்காக 300 மில்லியன் ரூபாவையும், சுகாதாரத்திற்காக 300 மில்லியன் ரூபாவையும், தொழில்துறை அபிவிருத்திக்காக 10 மில்லியன் ரூபாவையையும் செலவிட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதன்படி, அரசாங்கம் சுகாதாரம் மற்றும் கல்விக்காக நியாயமான தொகையை செலவழித்த போதிலும், நாட்டின் தொழில்துறை அபிவிருத்தியை கவனிக்கத் தவறிவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.