Tuesday, January 20, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசஜித்துக்கு எதிரான டயனாவின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

சஜித்துக்கு எதிரான டயனாவின் மனுவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் பொது செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு எதிராக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தாக்கல் செய்திருந்த மனுவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, ​​அதன் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ள சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க இருந்தனர்.

எவ்வாறாயினும், இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​எதிர்மனுதாரர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்இ ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்குமாறு கோரினர்.

இதன்படி, எதிர்மனுதாரர்களுக்கு ஆட்சேபனைகளை தெரிவிக்க மே 22ஆம் திகதி வரை நீதிமன்றம் அவகாசம் அளித்தது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles