Friday, July 4, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாவின் வீட்டருகே பலத்த பாதுகாப்பு

கோட்டாவின் வீட்டருகே பலத்த பாதுகாப்பு

மிரிஹான ஜூபிலி கனுவ சந்திப்பகுதியில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டு வளாகத்தில் திடீரென பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான அரசாங்கத்துக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட அரங்கலய போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி போராட்டத்தில் கலந்துகொண்டவர்களால் மிரிஹான ஜூபிலி கனுவ சந்தியில் கொண்டாட்ட நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிகழ்வு போராட்டமாக மாறாமல் இடுப்பதற்காக பாதுகாப்பு வழங்க 1500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட 3000 பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அடங்கிய விசேட அதிரடிப்படையினர் மிரிஹான தலைமையக பொலிஸாருக்கு அழைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மார்ச் 31, 2022 அன்று ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டத்தின் ஒரு வருட பூர்த்தியை முன்னிட்டு இன்று போராட்டம் நடத்தப்படவுள்ளதாக தெரிவித்தே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles