ஹொரண – மலகல வீதி பாதுக்க குருகொட சமுர்த்தி வங்கிக்கு அருகில் காரும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து நேற்று (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக ஹொரண பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் பின்னால் பயணித்த நபர் சுமார் பதினைந்து மீற்றர் தூரம் தூக்கி வீசப்பட்டு எதிர்திசையில் உள்ள கடை ஒன்றின் கூரையில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதில் பயணித்தவர் கம்பி வேலியின் மேல் தூக்கி வீசப்பட்டு அருகில் உள்ள தோட்டத்தில் விழுந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கூரையின் மேல் விழுந்த நபரை, பிரதேசவாசிகளும் ஹொரண தீயணைப்பு அதிகாரிகளும் இணைந்து கீழே இறக்கி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளை ஓட்டியவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என பொலிஸார் தெரிவித்தனர்.