எரிபொருள் விற்பனை மூலம் அரசாங்கத்துக்கு கிடைத்த இலாபம் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
92 ஒக்டேன் பெற்றோல் லீற்றருக்கு 1.63 ரூபாவும், 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றிற்கு 1.15 ரூபாவும் அரசாங்கத்திற்கு கிடைக்கும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் மூலம் 4 சதமும், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் மூலம் 2.26 ரூபாவும், மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் மூலம் 2.66 ரூபாவும் அரசாங்கத்திற்கு கிடைக்கின்றது.
ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றருக்கு 338.37 ரூபா, ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் 373.85 ரூபா, லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் 324.96 ரூபா, சுப்பர் டீசல் லீற்றருக்கு 462.74 ரூபா அரசாங்கம் செலவழிப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
எரிபொருளுக்காக, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றருக்கு 78.46 ரூபாவும், ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றருக்கு 100.90 ரூபாவும், ஒட்டோ டீசல் லீற்றருக்கு 53.40 ரூபாவும், சுப்பர் டீசல் லீற்றருக்கு 84.40 ரூபாவும், மண்ணெண்ணெய் லீற்றருக்கு 3.65 ரூபாவும் அறவிடப்படுகின்றது.