Friday, January 16, 2026
32.8 C
Colombo
செய்திகள்உலகம்ஆலய படிக்கிணறு இடிந்து வீழ்ந்ததில் 35 பேர் பலி

ஆலய படிக்கிணறு இடிந்து வீழ்ந்ததில் 35 பேர் பலி

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநில இந்தூரில் ஆலய படிக்கிணறு இடிந்து வீழ்ந்ததில் 35 பேர் உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் மேலும் 14 பேர் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் காணாமல் போயுள்ளார்.

இந்தூரின் ஸ்ரீபலேஷ்வர் மகாதேவ் ஆலயத்தில் பழமையான படிக்கிணறு உள்ளது.

இங்கு ராமநவமியையொட்டி நேற்று (30) பல பக்தர்கள் வழிபாட்டில் ஈடுபட்டனர்.

இதன்போது படிக்கட்டு கிணற்றின் தடுப்புச் சுவர் பக்தர்களின் எடையைத் தாங்காமல் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

குறித்த கிணறு குறைந்தது 50-60 அடி ஆழமும் தண்ணீரில் நிரம்பியிருந்ததாகவும் கூறப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles