எதிர்வரும் சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதிகளை வழங்கும் திட்டத்திற்கு ஜப்பானின் பூரண பங்களிப்பை பெற்றுக்கொடுக்க செயற்படவுள்ளதாக ஜப்பானுக்கான இலங்கை தூதுவர் ரொட்னி பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜப்பானின் டோக்கியோவில் இடம்பெற்ற கண்காட்சியொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இலங்கையிடமிருந்து ஜப்பானுக்குத் தேவையான பொருளாதார ஆதரவை மீள ஆரம்பிப்பது தொடர்பில் ஜப்பானின் சிரேஷ்ட தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தூதுவர் தெரிவித்தார்.
ஜப்பானில் உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதியுதவியை மீண்டும் தொடங்க தேவையான இடம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இலங்கையின் சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் நோக்கில் ஜப்பானின் டோக்கியோவில் இரண்டு நாள் கண்காட்சி நடைபெற்று வருகிறது.
ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் ரொட்னி பெரேராவின் பங்குபற்றுதலுடன் கண்காட்சி இன்று ஆரம்பமானது.
இலங்கை தூதரகம் மற்றும் ஜப்பானிய வர்த்தக சங்கம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்ததுடன், இக்கண்காட்சியை காண இலங்கையர்கள் மற்றும் ஜப்பானியர்கள் என பெருமளவானோர் வருகை தந்திருந்தனர்.