சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தின் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 15 ஆம் திகதி, சட்டவிரோதமான கூட்டமொன்றின் அங்கத்தவர்களாகி மாணவர்களுக்கு படிவதையளிப்பதற்காக விடுதிக்குள் நுழைந்ததாகவும், புதிய மாணவர்களை தாக்கி காயப்படுத்தியதாகவும் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 28ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் பலாங்கொடை பிரதேசத்தில் வைத்து இவர்களை கைது செய்துள்ளனர்.
தெஹிவளை, மொரட்டுவை, அம்பலாங்கொடை மற்றும் வெலிமடை பிரதேசங்களைச் சேர்ந்த 23, 24 மற்றும் 25 வயதுடைய மாணவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (29) பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.