எரிபொருளின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையை இப்போது குறைக்க முடியாது என அகில இலங்கை பேக்கரி சங்கத்தின் தலைவர் என். கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் எரிபொருள் விலை அதிகரித்த போது பேக்கரி உற்பத்திகளின் விலைகள் அதிகரிக்கப்படவில்லை அல்லது குறைக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பேக்கரி தொழிலில், பேக்கரி உற்பத்திகளின் விலையை குறைக்கும் அளவுக்கு எரிபொருளின் விலை திருத்தம் செய்யப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.