Monday, December 22, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அர்ஜுனவுக்கு கடிதம்

தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு அர்ஜுனவுக்கு கடிதம்

தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக இராஜினாமா செய்யுமாறு விளையாட்டுத்துறை அமைச்சரின் சிரேஷ்ட ஆலோசகர் சுதத் சந்திரசேகரவினால் அர்ஜுன ரணதுங்கவிற்கு எழுத்துமூல அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவித்தல் நேற்று (29) வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய விளையாட்டு சபை நேற்று பிற்பகல் 2.00 மணிக்கு கூடவிருந்த போதிலும், தேசிய விளையாட்டு சபையின் உறுப்பினர்கள் எவரும் Zoom தொழில்நுட்பத்தினூடாக பங்குபற்றவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதில் ஆச்சரியப்பட வேண்டாம் எனவும், இனி உங்களை தேசிய விளையாட்டு சபையின் தலைவராக ஏற்றுக்கொள்ள மாட்டோம் எனவும் சுதத் சந்திரசேகர அர்ஜுன ரணதுங்கவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles