சீனாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டொலரை இடைநிலை நாணயமாக பயன்படுத்துவதை கைவிட இரு தரப்பினரும் தீர்மானித்துள்ளதாக இலங்கையில் உள்ள சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
இதற்கு இரு நாட்டு மத்திய வங்கிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி, சீனாவுக்கும் பிரேசிலுக்கும் இடையிலான வர்த்தக பரிவர்த்தனைகளில், இரு நாடுகளின் நாணயங்களை பயன்படுத்தி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும்.