Sunday, August 10, 2025
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொஹில நுகர்வு 45% ஆக அதிகரிப்பு

கொஹில நுகர்வு 45% ஆக அதிகரிப்பு

பொருளாதார நெருக்கடியின்போது இலங்கையில் கொஹில தண்டின் நுகர்வு சுமார் 45 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கை ஒன்று தெரியவந்துள்ளது.

ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் ஆராய்ச்சி நிறுவகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் இவ்விடயம் கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 செப்டம்பர் முதல் 2022 இறுதி வரை, நாட்டில் உணவுப் பணவீக்கம் சுமார் 95 சதவீதம் அதிகரித்துள்ளது.

அந்தக் காலப்பகுதியில் வீட்டு பாவனைக்காக காய்கறிகளின் நுகர்வு அதிகரித்துள்ளதாகவும், கொஹில தண்டின் நுகர்வு 45 சதவீதமாக அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், அதனுடன் ஒப்பிடுகையில், கெரட், பூசணி மற்றும் கத்தரிக்காயின் நுகர்வு குறைந்துள்ளதாக ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய மற்றும் ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles