Tuesday, February 10, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஎதிர்க்கட்சியின் 17 எம்.பிக்கள் அரசுடன் கைகோர்ப்பு?

எதிர்க்கட்சியின் 17 எம்.பிக்கள் அரசுடன் கைகோர்ப்பு?

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைவதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

எதிரணியில் இருந்து அரசு பக்கம் தாவும் 17 எம்.பிக்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவார்கள் என்றும் தெரியவருகின்றது.

அவர்களுள் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எம்.பிக்கள் இருவரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் அடங்குகின்றனர் என்றும் அறியமுடிகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles