பொலன்னறுவை – வெலிக்கந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செவனப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாகனத்தில் பயணித்த மேலும் இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று (29) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் உயிரிழந்தவர் தம்பிலுவில் தம்பட்டை பகுதியைச் சேர்ந்தவராவார்.
விபத்தில் காயமடைந்த இருவரும் வெலிக்கந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை வெலிக்கந்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.