Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஜோசப் மைக்கலின் பூதவுடலுக்கு நாளை நாடாளுமன்றில் அஞ்சலி

ஜோசப் மைக்கலின் பூதவுடலுக்கு நாளை நாடாளுமன்றில் அஞ்சலி

முன்னாள் சபாநாயகர் மறைந்த ஜோசப் மைக்கல் பெரேராவின் பூதவுடல் நாளை (30) காலை 9.00 மணியளவில் நாடாளுமன்ற வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.

இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை நாடாளுமன்றத்திற்கு முன்பாக உள்ள விசேட சம்பிரதாய மண்டபத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும்.

ஜோசப் மைக்கேல் பெரேரா இலங்கை நாடாளுமன்றத்தின் 17ஆவது சபாநாயகராவார். 2001 முதல் 2004 வரை சபாநாயகராக பணியாற்றினார்.

பல அரசாங்கங்களில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் மற்றும் தொழிலாளர் உட்பட அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles