Tuesday, July 29, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகாட்டு யானை தாக்கி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி பலி

காட்டு யானை தாக்கி வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி பலி

கலென்பிதுனுவௌ – படிகாரமடுவ பிரதேதசத்துக்குள் நுழைந்த காட்டு யானைகளை விரட்ட முயன்ற வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) மாலை வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்துக்கு கிடைத்த தகவலுக்கமைய, குறித்த காட்டு யானைகளை விரட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி நபரின் வழிகாட்டலுக்கமைய, குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதுடன். அதன்போது காட்டு யானையொன்றின் தாக்குதலுக்கு அவர் இலக்காகியுள்ளார்.

படுகாயமடைந்த வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

20 ஆண்டுகள் வனவிலங்கு பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றிய அவர் தனது 42 ஆவது வயதில் உயிரிழந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles