Saturday, November 1, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 7 நிறுவனங்கள் ஆர்வம்

ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 7 நிறுவனங்கள் ஆர்வம்

ஹம்பாந்தோட்டையில் உத்தேச புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு 7 நிறுவனங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று(28) தெரிவித்தார்.

மிரிஜ்ஜவிலவில் அமைக்கப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பான காலக்கெடு நேற்றுடன் நிறைவடைந்துள்ள நிலையில், அதற்காக குறித்த நிறுவனங்கள் தமது ஆர்வத்தை தெரிவித்துள்ளதாக அமைச்சர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழு மற்றும் பிற கொள்முதல் குழுக்கள் இந்த விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து பொருத்தமான விண்ணப்பதாரர்களுக்கு முன்மொழிவுகளுக்கான கோரிக்கையை வழங்கும் என்று அவர் மேலும் கூறினார்.

ஹம்பாந்தோட்டையில் ஏற்றுமதி சார்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதற்கான ஆர்வத்தை கோருவதற்கு கடந்த 2023 ஜனவரியில் எரிசக்தி அமைச்சுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles