Thursday, July 24, 2025
25.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'பரவி சுதா'வின் உதவியாளர் கைது

‘பரவி சுதா’வின் உதவியாளர் கைது

போதைப்பொருள் வர்த்தகர் பரவி சுதாவின் உதவியாளர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி டுபாய்க்கு தப்பிச்செல்ல முயற்சிக்கையிலேயே அவர் அரச புலனாய்வு சேவையின் கட்டுநாயக்க பிரிவின் பொலிஸ் அதிகாரிகளால் சந்தேகத்தின் பேரில் இன்று (28) கைதுசெய்யப்பட்டார்.

இவர் தனது உண்மையான பெயருக்கு பதிலாக வேறு ஒரு பெயரை பயன்படுத்தி போலியான வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரித்து டுபாய்க்கு தப்பிச்செல்ல முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

டுபாய் நாட்டில் தலைமறைவாக இருந்து போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச்செயல்களை முன்னெடுப்பதாக நம்பப்படும் பரவி சுதாவை நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles