Friday, March 27, 2026
33.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசைக்கிள் - வேன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி

சைக்கிள் – வேன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் பலி

கல்முனை – மட்டக்களப்பு வீதியில் காத்தான்குடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (27) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனை – மட்டக்களப்பு வீதியில் நாவற்குடா பகுதியில் காத்தான்குடியிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த துவிச்சக்கர வண்டி வீதியில் வலப்புறம் திரும்ப முற்பட்ட போது அதே திசையில் பயணித்த வேனுடன் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் பலத்த காயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

பொலொன்னறுவை-சுங்காவில பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய வேன் சாரதி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles