இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த 8 பேர் இன்று செவ்வாய்கிழமை (28) காலை இந்தியாவின் தமிழ்நாட்டின் தனுஷ்கோடியில் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்திய கடலோரக் காவல்படையின் ஹோவர் கிராஃப்ட் மூலம் அவர்கள் மணல் மேட்டில் இருந்து மீட்கப்பட்டு, சட்ட நடவடிக்கைகளுக்காக இந்திய மெரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
கிளிநொச்சியில் உள்ள தருமபுரத்தைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த ஐந்து பேர் பெண்கள் மற்றும் இருவர் குழந்தைகள் உள்ளிட்ட எட்டு பேரே இந்தியா செல்வதற்காக சட்டவிரோத படகு நடத்துனருக்கு 1.45 இலட்சம் ரூபாய் செலுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த வகையில் இந்த எட்டு பேர் உட்பட 225 க்கும் மேற்பட்ட இலங்கை பிரஜைகள் இலங்கையிலிருந்து பொருளாதார நெருக்கடியின் காரணமாக புகலிடம் கோரி இந்தியா சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.