Monday, November 18, 2024
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅமெரிக்க பாடசாலையொன்றில் 3 சிறார்கள் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்க பாடசாலையொன்றில் 3 சிறார்கள் உட்பட 6 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தின் நாஷ்வில்லில் உள்ள பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மூன்று சிறுவர்கள் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர்

பலியான மாணவர்கள் மூவரும் 9 வயதானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன் 61 வயதுடைய இருவரும் 60 வயதான ஒருவரும் உயிரிழந்ததாக அந்த நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டை நடத்திய நபர் (28) அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில் துப்பாக்கி வன்முறை மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க காங்கிரஸுக்கு அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

கடந்த ஆண்டு, அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கி வன்முறையைத் தடுக்கும் முயற்சியில், அந்த நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் ஒரு முக்கிய துப்பாக்கி கட்டுப்பாட்டு சட்டத்தை நிறைவேற்றினார்.

இது இளம் வயதினர் துப்பாக்கிகளை கொள்வனவு செய்வதை கட்டுப்படுத்தியதுடன் அச்சுறுத்தலாகக் கருதப்படும் மக்களிடமிருந்து துப்பாக்கிகளை அகற்றுவதற்கு வழிவகுத்தது.

எனினும் அமெரிக்க மாநிலங்களில் துப்பாக்கி கட்டுப்பாட்டை நிறைவேற்றுவதை கடினமாக்கும் வகையில் அமெரிக்க உயர் நீதிமன்றம் தீர்ப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles