Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுIMF நிதியில் அரச சேவையாளர்களுக்கு சம்பளம்

IMF நிதியில் அரச சேவையாளர்களுக்கு சம்பளம்

மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான அரச சேவையாளர்களின் சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவு மற்றும் மேலதிக கொடுப்பனவுகளுக்காக சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியின் ஒரு தொகையினை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய பந்துல குணவர்தன, குறித்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு அரசாங்க வருமானம் போதுமானதாக இல்லை என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரச சேவையாளர்களது சம்பளம், ஓய்வூதிய கொடுப்பனவும் சமுர்த்தி உள்ளிட்ட கொடுப்பனவுகளுக்காக 196 பில்லியன் ரூபா மதிப்பிடப்பட்டுள்ளது.

அரசின் இந்த மாதத்தின் மொத்த வருமானமாக 173 பில்லியன் ரூபா எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் செலவினங்களுக்கு மேலதிகமாக 23 பில்லியன் ரூபா தேவைப்படுகின்றது.

புத்தாண்டு காலம் என்பதால் இரண்டு மாதங்களுக்கான கொடுப்பனவுகளையும் வழங்கவுள்ளதால், அதிகளவான நிதி தேவைப்படுகின்றது.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்பட்ட நிதியில் இருந்து ஒரு தொகையினை பெற்றுக்கொள்ள திறைசேரியிடம் கோரியுள்ளோம் என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles