இலங்கையில் விதிக்கப்படும் அதிகப்படியான வரிகள் காரணமாக பல்வேறு தொழிற்சங்கங்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றன.
இது சம்பந்தமாக பல்வேறு தொழிற்சங்கங்களை அழைத்து இணையவழியில் சர்வதேச நாணயத்தின் பிரதிநிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தை ஒன்றை நடத்தியுள்ளனர்.
இதில் இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தொழில் வல்லுனர்கள் சங்கம் மற்றும் இலங்கை மின்சார சபை பொறியாளர் சங்கம் ஆகியன கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இலங்கை அரசு நியாயமற்ற வரிகளை அறவிடுவதாகவும் அதிகமான வாழ்க்கைச் செலவு, எரிபொருள் விலை அதிகரிப்பு போன்ற விடயங்களை தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டி இருந்தன.
எவ்வாறாயினும் எதிர்வரும் ஆறு மாதங்களின் பின்னர் இலங்கையில் IMF வேலைதிட்டம் மீளாய்வு செய்யப்படும் போது, பல வரிகள் மறுசீரமைக்க பட வாய்ப்புகள் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.