Sunday, September 14, 2025
27.8 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிவசாய அதிகாரி கொலை - 'டேனி பேபி' கைது

விவசாய அதிகாரி கொலை – ‘டேனி பேபி’ கைது

இன்று காலை (27) தங்காலை பொலிஸ் பிரிவில் வெலியார-நெதொல்பிட்டிய பிரதேசத்தில் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர் 30 வயதான ஆர்.எம்.தீபிகா என்ற அப்பகுதியில் விவசாய ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்த திருமணமான பெண் என தெரியவருகிறது.

உயிரிழந்த பெண் தான் வசிக்கும் அதே பகுதியில் பணிபுரிந்து வந்ததோடு, இன்று வீட்டில் இருந்து வயல் பணிக்காக சென்றுக்கொண்டிருந்த போது, ​​நேற்று முன்தினம் ஏற்பட்ட பணி பிரச்சனை காரணமாக அந்த பகுதியை சேர்ந்த ஒருவரால் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உரம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 41 வயதான ஜயவர்தன பத்திரனகே சரத் எனப்படும் ‘டேனி பேபி’ என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தங்காலை நீதவான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன், சடலம் பிரேத பரிசோதனைக்காக தங்காலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles