Thursday, May 29, 2025
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவசந்த முதலிகேவுக்கு எதிராக தாக்கல் செய்த மனு விசாரணை ஒத்திவைப்பு

வசந்த முதலிகேவுக்கு எதிராக தாக்கல் செய்த மனு விசாரணை ஒத்திவைப்பு

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவை விடுதலைக்கு எதிராக சட்டமா அதிபர் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை ஏப்ரல் 03 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த மேன்முறையீட்டு மனு இன்று (27) கொழும்பு மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேல் நீதிமன்ற நீதிபதி இன்று விடுமுறையில் இருப்பதால்,சம்பந்தப்பட்ட மனுவை பரிசீலிக்க ஏப்ரல் 03ஆம் திகதி அழைக்கப்படும் என உயர்நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, ​​பிரதிவாதி வசந்த முதலிகேவும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்படவிருந்த வசந்த முதலிகே, போதிய சாட்சியங்கள் இல்லை என தெரிவித்து கொழும்பு பிரதான நீதவானால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை விடுவிப்பதற்கு கொழும்பு பிரதான நீதவான் எடுத்த தீர்மானம் சட்டத்திற்கு முரணானது எனவும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles