கண்டி – முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் ரயில் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (26) பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயில் மோதி மாணவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டி – மாதபோவல பிரதேசத்தை சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மாணவன் தனது கைப்பேசியில் அழைப்பில் இருந்தபோது, பாதசாரிகள் பயணிக்கும் மேம்பாலத்தை கடக்காமல் ரயில் தண்டவாளத்தை கடக்கும்போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
சடலம் கண்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.