Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபேருந்து - லொறி மோதி விபத்து : 15 பேர் காயம்

பேருந்து – லொறி மோதி விபத்து : 15 பேர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்தின் மீது கொள்கலன் லொறி மோதி விபத்துக்குள்ளானது.

சம்பவத்தில் 15 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்இ அவர்களில் 4 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (26) இரவு 10.00 மணியளவில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் களுத்துறை வடக்குஇ பெல்பொல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கொழும்பை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று கொள்கலன் லொறியை முந்திச்செல்ல முற்பட்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற போது பேருந்தில் சுமார் 38 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்று உடனடியாக களனிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்தவர்களை களுத்துறை நாகொட வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles