மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அமுலில் உள்ள பொலிஸ் பிணை முறைமையை இடைநிறுத்துவதற்கு பொலிஸார் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு பொலிஸ் பிணை வழங்குவதற்கு பொலிஸ் தலைமையக கட்டளைஅதிகாரிகள் மற்றும் நிலைய பொறுப்பதிகாரிகளின் அங்கீகாரம் இரத்து செய்யப்படவுள்ளது.
கைது செய்யப்பட்ட குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளுக்கு பொலிஸ் பிணை வழங்காமல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போக்குவரத்து நிலைய கட்டளை அதிகாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் வாய்மொழி அறிவித்தலில் சுட்டிக்காட்டியுள்ளார்.
முன்னதாக மூன்றாம் தரப்பினருக்கு வாகனம் வழங்குவதற்கான வாய்ப்புகள் இருந்த போதிலும், அதுவும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.