அரசாங்கத்திற்குச் சொந்தமான உத்தியோகபூர்வ இல்லத்தை தனது தாயார் ஹேமா பிரேமதாச, அரசாங்கத்திடம் ஒப்படைக்கத் தயார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அண்மையில் ‘டோக் வித் சுதத்தா’ யூடியூப் சேனலுக்கு வழங்கிய நேர்காணலில் எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் கூறியதாவது:
என் அம்மா இப்போது உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்துவதில்லை. உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் இருந்ததில்லை. என் அம்மா ஒரு தனியார் வீட்டில் வசிக்கிறார். என் தாய் என் தந்தையின் ஓய்வூதியத்தைப் பெறுகிறார். நான் அதை மறுக்க மாட்டேன். எனக்கு அதில் தவறேதும் தெரியவில்லை. என் தாய்க்கு பாதுகாப்பு கிடைக்கிறது. என் அம்மா இப்போது வயதானவர். அந்தச் சலுகைகளை அவர் தவறாகப் பயன்படுத்தி அரசியல் பார்ப்பதாக நான் நினைக்கவில்லை. அப்பாவின் அர்ப்பணிப்பு என் அம்மாவுக்கு சலுகைகளை அனுபவிப்பதில் ஒரு பிரச்சனை இல்லை. அவரது சொந்த விருப்பத்திற்கமைய, உத்தியோகபூர்வ இல்லம் ஒப்படைக்கப்பட உள்ளது.