Friday, July 25, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஉணவுப் பொதிகளின் விலை குறையும் சாத்தியம்

உணவுப் பொதிகளின் விலை குறையும் சாத்தியம்

மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தற்போது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளமையினால் உணவுப்பொதி விலை குறைக்கப்படும் சாத்தியம் உள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார்.

1,300 ரூபாவுக்கும் அதிக விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மீன்களின் விலை, தற்போது 600 ரூபாவுக்கும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.

மரக்கறிகளின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன. பருப்புஇ கிழங்கு என்பற்றின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.

நாட்டில் உள்ள பொதுமக்கள் மூன்று வேளை முறையாக உண்பதுக்கு சரியான வேலைத்திட்டங்கள் இல்லை.

ஆகையால் எமது சங்கம் வாடிக்கையாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு உணவுப் பொதியின் விலைகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

எனவே, உணவுப் பொதிகளின் விலைகள் குறைக்கப்படாவிட்டால், அதனை வாடிக்கையாளர்கள் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு தாம் வலியுறுத்துவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles