ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு வழங்க வேண்டிய 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்குவதற்காக தற்போது நிதி சேகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
காலி – பத்தேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார்.
உரிய நட்டஈடு தொகையை வழங்க இன்னும் 3 மாதங்களே உள்ளதாக அவர் கூறினார்.
2019ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று நடத்தப்பட்ட தொடர் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 கோடி ரூபா இழப்பீடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கு உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.