அரச பல்கலைக்கழகம் அல்லாத பல்கலைக்கழக மாணவர்களின் உயர் கல்விக்கான கடன் திட்டம் அடுத்த வாரம் அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த தகவலை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.
குறித்த கடன் திட்டத்தை வழங்குவதற்கு நிதி அமைச்சின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.
இந்த கடன் திட்டம் இலங்கை வங்கியினால் மட்டுமன்றி மேலும் மூன்று வங்கிகளாலும் 5,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் இது தொடர்பான தேவையான விதிமுறைகள் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.