பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின் பதவிக் காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சி.டி.விக்ரமரத்னவின் பதவிக்காலம் மார்ச் 23 ஆம் திகதி நிறைவுக்கு வந்த நிலையிலேயே அவரது பதவிக் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஜனாதிபதியின் பரிந்துரைக்கு அமைவாகச் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
எவ்வாறெனினும் தற்போதைய பொலிஸ் மா அதிபரின் பதவிக்காலம் மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக இன்று நம்பகத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.